AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வீடியோ கான்பெரன்ஸில் ஆஜராகிய பின் மனுவை திரும்பப் பெற்றதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. முதலமைச்சர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது .

முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா
முதல்வர் விஜய் - சங்கீதா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Aug 2026 16:36 PM IST

சென்னை, ஆகஸ்ட் 8 : முதல்வர் விஜய் – சங்கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முன் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வீடியோ கான்பெரன்ஸில் ஆஜராகிய பின் மனுவை திரும்பப் பெற்றதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. முதலமைச்சர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில் இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு இரு தரப்பும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையும் படிக்க : விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூன் 15, 2026 அன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7, தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு ஆகஸ்ட் 7, 2026 இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் முதல்வர் விஜய் நேரில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு தனது வாதங்களை முன் வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முடிவில் தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையும் படிக்க : அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!

விஜய் – சங்கீதா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் முதல்வர் விஜய்யுடனான கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி, சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மீண்டும் இணைந்து வாழவிருக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow Us