3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஆகஸ்ட் 7, 2026 இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 7 : தமிழகத்தில் ஆகஸ்ட் 7, 2026 இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக, ஆகஸ்ட் 7, 2026 இன்று கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதா?”.. 98 மலை கிராம மக்கள் தேனியில் திரண்டு வீதி மறியல்!!
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் வரும் ஆகஸ்ட் 8, 2026 நாளை மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 9, 2026 ஞாயிற்றுக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 10 முதல் 12, 2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல், வரும் ஆகஸட் 13, 2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “வாக்குறுதிகளை நிறைவேற்று!”.. தலைமைச் செயலகம் முன் கோணிப்பையைக் கட்டி விவசாயிகள் போராட்டம்.. குண்டுக்கட்டாகக் கைது!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 11, 2026 வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது