AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம் – தமிழக அரசு நடவடிக்கை

TN Govt Requests Governor's Permission : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்வதற்கான அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம் – தமிழக அரசு  நடவடிக்கை
முதல்வர் விஜய் - செந்தில் பாலாஜி
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Jun 2026 16:19 PM IST

சென்னை, ஜூன் 6 : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்வதற்கான அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் சட்ட விரோதமாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்

இந்த நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பாதிக்கப்பட்ட தரப்பு புகார் அளித்தனர். இதன் கீழ் ஏமாற்றுதல், குற்றச்சாட்டுகளுக்கு உடந்தையாக இருந்தல், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிக்க : விசிக கேட்கும் அந்த தொகுதி.. தவெகவிடம் டீல் பேசும் திருமாவளவன்.. ரகசிய மூவ் என்ன?

அதனைத் தொடர்ந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்த தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து 15 மாத சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியதைத் தொடர்ந்து அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுதலையானார்.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தாலும், குற்றம் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் அவர் அமைச்சராக இருந்ததால், மாநில அரசிடம் அனுமதி பெறுவது அவசியம். இதனையடுத்து கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அமலாக்கத்துறை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறைக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்பதால் நீதிமன்ற விசாரணை தொடங்கப்படாத நிலையில் உள்ளது.

இதையும் படிக்க : பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கட்சியில் பதவி.. அண்ணாமலையின் அதிரடி ரூல்ஸ்!!

இந்த நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கவும் அனுமதி கோரி அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியது. அவர் மீது வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை வழக்குப்திவு செய்து விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஆளுநரின் அனுமதி கோரியுள்ளது. இதற்காக முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us