சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள்… வழியிலேயே காத்திருந்த விபத்து.. ராசிபுரத்தில் சோகம்!
Salem Tourist Van Lorry Accident : சேலத்தில் லாரி மீது சுற்றுலா வேன்மோதிய விபத்தில் வேனில் பயணித்த சுமார் 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சேலம் மாவட்டம், நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் தனசேகர் ( 45 வயது). இவரது குடும்பத்தினர் சுமார் 12 பேர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர். அங்கு, சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சேலம் திரும்பி சென்று கொண்டிருந்தனர். வேனை மின்னம்பள்ளியை சேர்ந்த அரவிந்த் ( 29 வயது) ஓட்டிச் சென்றார். வேனானது சம்பவத்தன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், லாரியின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனின் ஓட்டுனர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் வேன் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
வேனில் பயணித்த 10 பேர் பலத்த காயம்
இந்த விபத்தில் வேனில் பயணித்த நாட்டாமங்கலத்தை சேர்ந்த தனசேகர் ( 45 வயது), சரஸ்வதி ( 34 வயது), சந்திரலேகா ( 32 வயது), கரண் (26 வயது), செல்வம் ( 41 வயது), விஷ்வா ( 20 வயது), கீர்த்தி வாசன் ( 36 வயது) உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: அதிமுகவில் வெடித்தது பூகம்பம்: சி.வி. சண்முகம் தலைமையில் 1,300 பேர் கூண்டோடு ராஜினாமா!




தீவிர சிகிச்சை பிரிவில் இருவர் அனுமதிப்பு
இதில், இருவர் தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், சுற்றுலா வேனுக்கு முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், விபத்துக்கு காரணமான லாரி விற்காமல் சென்று விட்டதால், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் – சேலம் நெடுஞ்சாலையில் நெரிசல்
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில், ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, போலீசார் அந்த விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டு அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் நில முறைகேடு பத்திரம் வெளியீடு.. பெரும் அதிர்ச்சி.. நடந்தது என்ன?