AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது அரசு கிடையாது… தவெக அரசை டேமேஜ் செய்த பிரேமலதா!

Premalatha Vijayakanth Criticized TVK Govt : தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில், தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது மட்டும் அரசு கிடையாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. தெரிவித்தார்.

தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது அரசு கிடையாது… தவெக அரசை டேமேஜ் செய்த பிரேமலதா!
முதல்வர் விஜய் - பிரேமலதா விஜயகாந்த்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Jul 2026 18:55 PM IST

தமிழகத்தில் காவிரி நீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில் தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது அரசு கிடையாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் இருந்து தற்போது வரை தமிழகத்துக்கான தண்ணீரை காவிரி ஆற்றில் இருந்து திறக்கவில்லை. இதற்கு, தமிழக அரசு சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா அரசு தைரியமாக கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் நேற்று அரிசி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு டன் அரிசி விலை ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அரிசிக்கு இந்த நிலை என்றால் மற்ற பொருட்களின் விலையும் அதிக அளவு உயரும் நிலை உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது அரசு கிடையாது

இதை விடுத்து விட்டு வெறும் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுது கொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது. இது பல கோடி தமிழக மக்களின் வாழ்வாதாரம் ஆகும். விரைவில் எல் நினோ தாக்கத்தால் காலநிலை, வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் தற்போது மழை இல்லை. மழைக்கான காலம் இருந்தும், எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லாததால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும் படிக்க: 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!

லாக்கப் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும்

விவசாயிகள் நன்றாக இருந்தால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை ஆகும். தமிழகத்தில் மீண்டும் தூத்துக்குடியில் லாக் அப் மரணம் நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் என தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. வரும் காலங்களில் இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினருக்கு ஒருவரை அடித்துக் கொலை செய்ய அதிகாரம் என்பது கிடையாது.

காவல் துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது

ஏதேனும் குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டால் அவரிடம் முறையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த வேண்டும். இதை தவிர்த்து விட்டு அவர்களை தாக்குவது, கொலை செய்வது என்பது உள்ளிட்ட எந்த அதிகாரமும் காவல்துறைக்கு கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?

Follow Us