AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது… பாமக தலைவர் அன்புமணி!

Mekedatu Issue: கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது… பாமக தலைவர் அன்புமணி!
அன்புமணி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 Jul 2026 20:09 PM IST

கர்நாடகத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அத்துடன், இது கடும் கண்டனத்துக்குரியதாகும். கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3- ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தை யார் ஏற்பாடு செய்தது. இதனை மத்திய அரசு ஏற்பாடு செய்ததா அல்லது கர்நாடக அரசு ஏற்பாடு செய்ததா என்கின்ற விவரம் தெரியவில்லை. . ஆனால், மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படியே பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றே முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த செல்வதாகவே தோன்றுகிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணமாகும். பாமக

கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை

மீண்டும் மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரி குறுக்கே மேகதாணை கட்டுவது என்பது தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையிலான பிரச்சினை கிடையாது. இது கர்நாடகா அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டுமே. இதுகுறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்தவிதமான பேச்சையும் நடத்த தேவையில்லை. மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு வார்த்தை நடத்தினால் அது இருதரப்பு பிரச்சனை என்று ஏற்றுக் கொண்டதாக பொருளாகிவிடும். அதன் பின்னர் மேகதாது அணை கட்டக் கூடாது என்பது தீர்வாக இருக்காது.

மேலும் படிக்க: காவிர் முதல் லாக்கப் டெத் வரை… தியேட்டரில் அழுது சீன் ஓட்டுவது அரசு கிடையாது… தவெக அரசை டேமேஜ் செய்த பிரேமலதா!

தமிழக உரிமைகளை தாரைவார்ப்பதற்கு சமம்

மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டிஎம் சியாக இருக்க வேண்டும். அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன என்பது மட்டுமே தீர்வாக இருக்கும். இவை காவிரியில் தமிழகத்துக்கு உரிய உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரை வார்ப்பதற்கு சமமாகும். மேகதாது அணை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்ட போதே பாமக கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

மேகதாது விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது

நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அது தமிழகத்துக்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்படுத்தி விடும். மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல், சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன் பிறகே தன்னுடைய நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசின் அதிரடி நகர்வு.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிய அந்த வார்த்தை!

Follow Us