இன்பதுரை வெற்றி செல்லாது, அப்பாவு வெற்றிபெற்றது உறுதி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திமுக வேட்பாளர் எம்.அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
சென்னை, ஜூன் 3 : கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திமுக வேட்பாளர் எம்.அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார். அவரது தீர்ப்பில், 104 வாக்கு வித்தியாசத்தில் இன்பதுரை வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இன்பதுரை வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவிப்பு
இந்த நிலையில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் என்று ஆகாது; 5 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ ஓய்வூதியம் கேட்க முடியாது என நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : இனி ஜெட் வேகத்தில் அரசு திட்டங்கள்.. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!




இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு பேசியதாவது, என் வலிக்கு நிவாரணம் அளித்துள்ளது நீதிமன்றம். தாமதமாக வந்தாலும் நீதி வென்றது. தலைமை செயலகம் உட்பட அனைத்து ஆவணங்களிலும் இன்பதுரை பெயர் நீக்கப்படும் என்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட இன்பதுரை, திமுக சார்பாக போட்டியிட்ட அப்பாவுவை விட 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக அப்பாவு தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் அவரது வாதத்தை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அதில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும் எண்ணப்பட்ட வாக்குகளில் முறைக்கேடு நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததுஇதனையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனவும் அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க : த.வெ.க சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்..
இந்த வழக்கு 2023 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது சீலிடப்பட்ட தபால் வாக்குகளில் 203 வாக்குகள் இருந்ததாகவும் அதில், 153 வாக்குகள் அப்பாவுக்கும் 1 வாக்கு இன்பதுரைக்கும் பதிவாகியிருந்தது. மீதமுள்ள 44 வாக்குகள் செல்லாத வாக்குகளாக உள்ளன என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.