AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஜெட் வேகத்தில் அரசு திட்டங்கள்.. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

District Wise Ministers In Charge: தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை விரைவு படுத்தும் வகையில் மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இனி ஜெட் வேகத்தில் அரசு திட்டங்கள்.. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 03 Jun 2026 14:01 PM IST

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தவும், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய் தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் முதல் திருப்பத்தூர் மாவட்டம் வரை

  • விழுப்புரம் மற்றும் கடலூர்- ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்.
  • சென்னை மற்றும் திருவண்ணாமலை- பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
  • மயிலாடுதுறை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட ரமணன்.
  • திருவள்ளூர்- செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.
  • திருநெல்வேலி- நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன்.
  • பெரம்பலூர்- பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
  • காஞ்சிபுரம்- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு.
  • திருப்பத்தூர்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்.

மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையம்… முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டம்.. என்ன முடிவெடுக்கப் போகிறார் விஜய்!

செங்கல்பட்டு முதல்  நாமக்கல் மாவட்டம் வரை

  • செங்கல்பட்டு- மனிதவள மேலான்துறை அமைச்சர் சரத்குமார்.
  • கள்ளக்குறிச்சி- சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.
  • ராணிப்பேட்டை- கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ்.
  • தருமபுரி மற்றும் அரியலூர்- வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்குமார்.
  • நாகப்பட்டினம்- சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான்.
  • தஞ்சாவூர்- வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்.
  • திருச்சி- இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் ரமேஷ்.
  • கரூர்- பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் விஜயலட்சுமி,
  • நாமக்கல்- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

திருப்பூர் முதல் விருதுநகர் மாவட்டம் வரை

  • திருப்பூர்- மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ்.
  • நீலகிரி- கால்நடைத்துறை அமைச்சர் கமலி.
  • வேலூர்- கைத்தறி, துணி நூல், காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி.
  • ஈரோடு- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன்.
  • கோவை- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார்.
  • மதுரை மற்றும் தேனி- எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.
  • புதுக்கோட்டை- தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஷ்.
  • சிவகங்கை- இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு.
  • கிருஷ்ணகிரி- தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா.
  • விருதுநகர்- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி.

திருவாரூர் முதல் திண்டுக்கல் மாவட்டம் வரை

  • திருவாரூர்- உயர் கல்வித்துறை விஸ்வநாதன்.
  • தூத்துக்குடி- மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்.
  • ராமநாதபுரம்- குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மதன் ராஜா.
  • சேலம்- போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.
  • கன்னியாகுமரி- சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்.
  • தென்காசி- சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ்.
  • திண்டுக்கல்- மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: திருச்சி செவிலியர் மாணவி உயரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Follow Us