AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பைக் டாக்சியில் சென்ற பெண் ஐடி ஊழியர் விபத்தில் மரணம் – என்ன நடந்தது?

Rapido Bike Accident : சென்னையில் பைக் டாக்சியில் சென்ற ஐடி ஊழியர் பெண் ஒருவர், பைக் மீது கார் மோதிய சம்வபவத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பைக் டாக்சி பாதுகாப்பானதா என்ற கேள்வியையும் இந்த விபத்து எழுப்பியுள்ளது.

பைக் டாக்சியில் சென்ற  பெண் ஐடி ஊழியர் விபத்தில் மரணம் – என்ன நடந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jun 2026 16:10 PM IST

சென்னை, ஜூன் 4 : இந்திய அளவில் ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. குறைந்த செலவில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் அவசர பயணங்களுக்கு பைக் டாக்சியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் சென்னையில் பைக் டாக்சியில் சென்ற ஐடி ஊழியர் பெண் ஒருவர், பைக் மீது கார் மோதிய சம்வபவத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பைக் டாக்சி பாதுகாப்பானதா என்ற கேள்வியையும் இந்த விபத்து எழுப்பியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பைக் டாக்சியில் சென்ற ஐடி ஊழியர் கார் மோதி பலி

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கோமதி என்பவர் ஜூன் 4, 2026 அன்று ரேபிடோ பைக் டாக்சியில் பயணித்துள்ளார். இந்த நிலையில் சென்னை வானகரம் அருகே அவர்களது பைக் சென்ற போது கார் மோதியதில் கோமதி சம்வப இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பைக் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு.. காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் பரிதாப பலி..

பைக் டாக்சியில் பயணிப்பது ஆபத்தானது என கருதி ஓலா, உபர், மற்றும் ராபிடோ போன்ற பைக் டாக்சி சேவைகளுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு தடை விதித்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதற்கு தடை விதிக்க பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது பாதுகாப்பானதாக இருக்காது எனவும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைகள் அதிகரித்தாலும், அவற்றிற்கான முறையான பாதுகாப்பு விதிகள் விதிக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு என்ற எந்த கேள்விகளுக்கும் யாரிடமும் இல்லை. குறிப்பாக நகர்புற போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்த பைக் டாக்சி சேவைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பைக் டாக்சி சேவை மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தற்காலிக வேலை வாய்ப்பை பெறுகின்றனர். இதனையடுத்து அவற்றை அரசு முறைப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க : சென்னை பள்ளிக்கரணையில் பெரும் தீ விபத்து.. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதம்..

மற்றொரு பக்கம் பைக் டாக்சி சேவைகளினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஆட்டோ மற்றும் கார் டாக்சி ஓட்டுநர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் பைக் டாக்சி ஓட்டுநர்களை, ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன.

Follow Us