இந்தியாவின் மெகா நகரங்களில் வாழும் பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் உயர் அதிகாரிகளின் வீட்டுச் சூழலில் இப்போது ஒரு புதிய கார்ப்பரேட் வேலைவாய்ப்பு வேகமாக உருவாகி வருகிறது. தங்களது வீட்டு வேலைகளைத் தனித்தனியாக ஆட்களை வைத்து மேலாண்மை செய்வதில் உள்ள மன அழுத்தத்தைத் தவிர்க்க, 'லைஃப்ஸ்டைல் மேனேஜர்கள்' அல்லது 'ஹவுஸ் மேனேஜர்களை' அவர்கள் தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவில் வேலைக்கு அமர்த்தத் தொடங்கியுள்ளனர்.