அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் திருமணமான சில மணி நேரங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை பூர்விகமாக கொண்ட 26 வயதான டேவ் ஃபிஜி, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்தார். அவர் தனது மனைவி ஜெஸ்னியுடன் திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் செல்ல ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, டாசன்வில் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.