AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காரில் அழைத்துச்சென்று சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. திருச்சியில் நடந்த பகீர் சம்பவம்..

கார் ஓட்டுநர் மாரீசெல்வனை தேடி வந்த பொதுமக்கள், இரவு 7.30 மணி அளவில் மீண்டும் கல்மந்தை காலனிக்கு வந்த அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் மாரீசெல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் அழைத்துச்சென்று சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. திருச்சியில் நடந்த பகீர் சம்பவம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Jun 2026 09:19 AM IST

ஜூன் 4, 2026: சிவகங்கையை சேர்ந்த மாரீசெல்வன் (43) என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மாரீசெல்வன், சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் ஆதிரா என்ற திருநங்கை மற்றும் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, ஆதிராவின் 14 வயது தங்கை, மாலை 5 மணி அளவில் கல்மந்தை காலனியிலிருந்து மாரீசெல்வன் தனது காரில் சுற்றிக்காட்டுவதாக கூறி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மாரீசெல்வன் அடிக்கடி அந்த பகுதிக்கு வருபவர் என்பதாலும், திருநங்கையான ஆதிராவிற்கு தெரிந்த நபர் என்பதாலும் சிறுமி அவருடன் சென்றதாக தெரிகிறது. மேலும், திருநங்கையான சிறுமியின் சகோதரரும் சில திருநங்கைகளும் உடன் சென்றதாக கூறப்படுகிறது.

காரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:

சிறுமியை சிறிது தூரம் காரில் அழைத்துச் சென்ற பின்னர், அந்த கும்பல் மது கலந்த ஜூஸ் வகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த சிறுமி, ஒரு கட்டத்தில் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

அப்போது, வேறுொரு பகுதியில் மாரீசெல்வனுடன் மேலும் மூன்று இளைஞர்கள் காரில் ஏறியதாக கூறப்படுகிறது. அவர்கள் கூட்டாக சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், சுயநினைவை இழந்த நிலையில் இருந்த சிறுமியை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த மார்க்கெட் பகுதியில் அந்த கும்பல் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ‘கெட்டுப்போன சிக்கனில் பிரியாணி’.. 100க்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு.. இருவர் கவலைக்கிடம்!!

அப்போது, சிறுமி போதை தலைக்கேறிய நிலையில் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்களும் அப்பகுதி காவல்துறையினரும் உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கார் ஓட்டுநரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்:

தொடர்ந்து, கார் ஓட்டுநர் மாரீசெல்வனை தேடி வந்த பொதுமக்கள், இரவு 7.30 மணி அளவில் மீண்டும் கல்மந்தை காலனிக்கு வந்த அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் மாரீசெல்வனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது, பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். தொடர்ந்து, சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Follow Us