AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: தொடர்ந்து மோசமான பார்ம்.. சிக்கலில் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷி.. விவாதத்தில் பிசிசிஐ!

Indian T20 Captain: இந்திய அணி அடுத்ததாக, வருகின்ற 2026 ஜூன் 26-ஆம் தேதி தொடங்கும் டி20 தொடரில் அயர்லாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகள் இடம்பெறும். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி களமிறங்கும். இந்த 2 தொடர்களுக்குமான இந்திய அணியைத் தேர்வு செய்யும்போது, ​​சூர்யகுமார் யாதவ் பெயர் கண்டிப்பாக விவாதிக்கப்படும்.

Team India: தொடர்ந்து மோசமான பார்ம்.. சிக்கலில் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷி.. விவாதத்தில் பிசிசிஐ!
சூர்யகுமார் யாதவ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Jun 2026 09:36 AM IST

இந்திய டி20 அணியின் (Indian Cricket Team) கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது கேப்டன் பதவியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்று அதாவது 2026 மே 4ம் தேதி நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் டி20 கேப்டன் பதவி குறித்து பிசிசிஐ விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவின் மோசமான ஆட்டம் அவரது கேப்டன் பதவி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பிசிசிஐ (BCCI) சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஒருவரை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. சூர்யகுமார் யாதவ் கடைசியாக 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணிக்காக விளையாடினார். அவரது கேப்டன்சியின் கீழ் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது. தற்போது, ​​அடுத்த டி20 போட்டிக்கு முன்னதாக, சூர்யாவின் கேப்டன் பதவியும், அணியில் அவரது இடமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ALSO READ: 40 நாட்களில் 2 டெஸ்ட் உள்பட 12 போட்டிகள்.. வெளியான இந்தியா – நியூசிலாந்து தொடருக்கான அட்டவணை!

இந்திய அணி அடுத்ததாக, வருகின்ற 2026 ஜூன் 26-ஆம் தேதி தொடங்கும் டி20 தொடரில் அயர்லாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகள் இடம்பெறும். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி களமிறங்கும். இந்த 2 தொடர்களுக்குமான இந்திய அணியைத் தேர்வு செய்யும்போது, ​​சூர்யகுமார் யாதவ் பெயர் கண்டிப்பாக விவாதிக்கப்படும்.

சூர்யகுமார் யாதவின் மோசமான ஃபார்ம்:

சூர்யகுமார் யாதவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் அவருக்கு மேலும் மேலும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச அணியில் கூட சூர்யகுமார் யாதவ் பெயர் இடம்பெறவில்லை. இப்போது கேள்வி என்னவென்றால், சூர்யாவுக்குப் பதிலாக யார் வருவார் என்பதுதான்.

ALSO READ: ஒருநாள் போட்டிக்கு திரும்பும் விராட் கோலி.. இந்திய அணி பயிற்சியை எப்போது தொடங்குகிறது?

2 பெயர்களுக்கு இடையே கடும் போட்டி..

பிசிசிஐ தனது கருத்தை தேர்வாளர்களுக்குத் தெரிவிக்கலாம். தேர்வாளர்கள் 2026 மே 4ம் தேதியான இன்று தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் இது குறித்து விவாதிப்பார்கள். சூர்யகுமார் யாதவ் கேப்டனாகத் தொடராவிட்டால், ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐக்குள் உள்ள சிலர் நம்புகிறார்கள். ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன் பதவி குறித்து தேர்வாளர்களும் தலைமைப் பயிற்சியாளரும் ஒரு முடிவுக்கு வர முடியாவிட்டால், திலக் வர்மாவின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இருப்பினும், பிசிசிஐயின் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு நபர் சஞ்சு சாம்சனை ஒரு எதிர்கால கேப்டனாக வேண்டும் என்று வலுவான கருத்தை முன்வைத்து வருகிறார்.

Follow Us