மலையாளத் திரைப்படத் துறை சங்கமான 'அம்மா' அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு அமைப்பிற்குள் ஏற்படும் பிரச்சினைகள் அந்த அமைப்பிற்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்றும், அங்கு தீர்வு கிடைக்காத விரக்தியிலேயே நடிகை அன்சிபா ஹாசன் ஊடகங்கள் முன் பேசியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.