டெல்லியில் வீட்டு வாடகை, உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மாதம் 90 ஆயிரம் சம்பளம் பெறும் அரசு அதிகாரி ஒருவர் தனது செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 28 வயதான கிருத்திகா, உதவி பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், டெல்லியில் மாதம் சுமார் 25 ஆயிரம் மட்டுமே செலவிடுவதாக தெரிவித்துள்ளார்.