மருந்துகளை கையாளும் துப்புரவு பணியாளர்.. செங்கம் பொது மருத்துவமனையில் அதிர்ச்சி..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்துவரும் துப்புரவு பணியாளர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்ட சம்பவம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்துவரும் துப்புரவு பணியாளர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்ட சம்பவம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. செங்கம் பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற மெத்தனமான செயல்களில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
