எகிப்தின் அலெக்சாண்ட்ரியா அருகே புகழ்பெற்ற மாலுமி கேப்டன் மோரேசியஸ் பயணம் செய்த போது, கடலில் மறைந்திருந்த பெரிய பாறைகளால் அவரது கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததுடன், பெரும் பொருள் சேதமும் ஏற்பட்டது. இதன் பின்னர், கப்பல்களை பாதுகாப்பாக வழிநடத்த ஒரு ஒளிக்கோபுரம் அவசியம் என்பதை அந்நாட்டு ஆட்சியாளர் உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து, அலெக்சாண்ட்ரியா துறைமுகம் அருகிலுள்ள பாரோஸ் தீவில் உலகின் முதல் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. “பாரோஸ் ஆஃப் அலெக்சாண்ட்ரியா” என அழைக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் அக்காலத்தின் மிகப்பெரிய பொறியியல் சாதனையாக கருதப்பட்டது.