ஜம்மு-காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் தீவிரமான தேடுதல் வேட்டைகள் மற்றும் விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI ஒரு புதிய சதித்திட்டத்தை வகுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள தங்களின் 'ஓவர் கிரவுண்ட் வொர்க்கர்ஸ்' (OGWs - பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவும் உள்ளூர் ஆதரவாளர்கள்) எனப்படும் வலையமைப்பைச் சேர்ந்தவர்களை, இந்தியாவின் முன்னணி தேசிய அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவுமாறு ஐஎஸ்ஐ உத்தரவிட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.