பைக் டாக்ஸி புக் செய்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் பகீர்!
a shameful incident happened in chennai: சென்னையில் பைக் டாக்ஸி புக் செய்த பெண் ஒருவரிடம், அதன் ஓட்டுநர் தனது நண்பருடன் வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் சென்னையில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
சென்னை, அக்டோபர் 25: சென்னையில் பைக் டாக்ஸி புக் செய்த இளம்பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பைக் டாக்ஸி ஓட்டுநர்களால் இதுபோன்று கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்ததரவு அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அரசு இவற்றை கவனத்தில் கொண்டு தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதான் காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளை காட்டிலும், தனியார் போக்குவரத்து சேவைகள் அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. அந்தவகையில், ஆட்டோ, கார் டாக்ஸிகள் அதிகரித்திருந்தாலும், போக்குவரத்திற்கான தேவை மேலும் அதிகமாக இருப்பதால், பைக் டாக்ஸி சேவை அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எனினும், இந்த பைக் டாக்ஸியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அதோடு, சமூதாயத்தில் பெண்கள் தனித்து இயங்க பல்வேறு ஊக்கங்களை அளித்து வரும் நாம், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மீண்டும் அவர்கள் வீட்டினுள் முடங்கி விடாதபடி பார்த்துக்கொள்வதும் அவசியமாகும்.
Also read: 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 74 வயது முதியவர்.. காத்திருந்த ட்விஸ்ட்!
அந்தவகையில், சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அலுவலகம் செல்வதற்காக ஊபர் பைக் டாக்ஸி புக் செய்துள்ளார். அப்போது, அப்பெண் இருக்கும் இடத்திற்கு வந்த பைக் ஓட்டுநர் அவர் தனியாக இருப்பதை கவனித்துள்ளார். அதோடு, தான் ஏற்கெனவே எடுத்த பார்சல் ஆர்டரை டெலிவலரி செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றும் கூறி சென்றுள்ளார். இதனை நம்பிய அப்பெண் அவருக்காக காத்திருந்துள்ளார்.
ஆனால், பார்சலை கொடுத்துவிட்டு திரும்பி வந்த நபர் உடன் மற்றொருவரையும் அழைத்து வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணிற்கு பைக்கில் வந்த இருவரும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். எனினும், அருகில் யாரும் இல்லாத நிலையில், அவருக்கு உதவுவதற்கு யாரும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர்களின் செய்கையால் அதிர்ந்துபோன அந்தப்பெண் இருவரிடம் இருந்தும் தப்பியோடியுள்ளார். அதோடு, நிற்காமல் சம்பவம் தொடர்பாக துணிச்சலாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். அதில், பைக் டாக்ஸி புக் செய்த போது வந்தப் பெயர், செல்போன் எண், பைக்கின் எண் உள்ளிட்ட தகவலை குறிப்பிட்டுள்ளார்.
Also read: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
உடனடியாக விசாரணையை துவங்கிய போலீசாருக்கு, அவர்கள் இருவரும் அதேபகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபர்களை போலீசார் வலைவீசி தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். பைக் டாக்ஸியில் இளம் பெண் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



