இனி கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்பட வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து இனி கோயம்பேட்டில் இருந்தே இனி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது மக்களிடையே மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூன் 6 : தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் புறப்பட வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும் சென்னை நகருக்குள் நுழையக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. மீறும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இனி கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கம்?
இந்த நிலையில் இதனை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போரூர் டோல்கேட் உள்ளிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி – இறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிக்க : செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம் – தமிழக அரசு நடவடிக்கை




இந்த வழக்கு ஜூன் 6, 2026 இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி முக்கிய உத்தரவிட்டார். அதன் படி தமிழநாடு மோட்டார் வாகன சட்டத்தின் படி பேருந்து முனையம் அமைக்க மாநில ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தான் விண்ணப்பிக்க முடியும் என்பதால் பேருந்து முனையத்துக்கு ஒப்புதல் கோரி காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன் மாநில போக்குவரத்து ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.
குறிப்பிட்ட வழிதடத்தில் பேருந்துகளை இயக்க உரிமம் வழங்கிய நிலையில் அதை தடுக்க முடியாது. தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப்படுகிறது என்றார்.
இதையும் படிக்க : “திருப்பரங்குன்றம் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர்”.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
மேலும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது போரூர் சுங்கச்சாவடி அருகே பயணிகளை ஏற்றி இறக்குவதை போல, மாதவரம் ரவுண்டானா அருகில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்ற முடிவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். \
மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்ல சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வர வேண்டியிருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் இனி ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயங்கும் என்பதால் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 83157