AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராகுல் காந்தி தமிழகம் வருகை.. அழுத்தமா? கூட்டணி தர்மமா? பின்னணி என்ன?

Rahul Gandhi Tamil Nadu Visit: காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சி தலைவருமான ராகுல் காந்தி தமிழகம் வருகை உறுதியான நிலையில், அவரது வருகைக்கு பின்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ராகுல் காந்தி தமிழகம் வருகை.. அழுத்தமா? கூட்டணி தர்மமா? பின்னணி என்ன?
ராகுல் காந்தியின் தமிழக வருகைக்கு பின் இருப்பது என்ன
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 17 Apr 2026 18:06 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. இதில், திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, தமிழக வெற்றி கழகத்துடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்து வந்தது. அதற்கு அச்சாரமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் ஆகியோர் திமுகவை விமர்சிப்பதும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை ஆதரித்து பேசுவதாக இருந்து வந்தனர். இதில், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், திமுகவின் உறவை முறித்து விட்டு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது சரியாக இருக்காது என்று சோனியா காந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்தி அதிருப்தி

எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் எந்த அளவுக்கு உள்ளனர் என்பதை பார்த்து கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சோனியா காந்தியின் இந்த கருத்தில் ராகுல் காந்திக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தி தமிழகத்திற்கான பிரச்சாரத்தை தவிர்த்து வந்ததாக பேசப்பட்டு வருகிறது. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தாலும், அந்த கூட்டணிக்குள் சலசலப்பு இருப்பதாக எதிர் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தது.

மேலும் படிக்க: திமுகவின் ஒற்றை நோக்கம் இது தான்.. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடி தாக்கு!

அழுத்தம் காரணமாக ராகுல் காந்தி வருகையா

இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சேலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக- காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்து வரும் ராகுல் காந்தி அந்த பொதுக் கூட்டத்தை புறக்கணித்திருந்தார். இதுவும், அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது. இதனிடையே, ராகுல்காந்திக்கு நெருங்கிய நபரான கமல்ஹாசன் மூலமாக திமுக தலைமை காய் நகர்த்தியிருந்தது. இந்த நிலையில், நாளை சனிக்கிழமை ( ஏப்ரல் 18) ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாகவும், அவர் சென்னை பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் கருத்து வேறுபாடு

ஆனால், ராகுல் காந்தியின் இந்த வருகை திமுக தலைமையின் அழுத்தம் காரணமாகவும், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அறிவுறுத்தலின் அடிப்படையிலும் அமைந்ததாக கூறப்படுகிறது. மொத்தத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் நிலவி வருவதும், ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதும் அவரது செயல்பாட்டின் மூலம் தெரிய வருவதாக பரவலாக பேசப்படுகிறது. இதனிடையே, மு. க. ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒன்றாக பிரசாரம் மேற்கொள்ள மாட்டார்கள் என்று திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!

Follow Us