AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி.. நாளை வருகிறார்!

Rahul Gandhi Election Campaign for Two Days | 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி திமுக உடன் இணைந்து களம் காண உள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ள ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 18, 2026) தமிழகம் வர உள்ளார்.

தமிழகத்தில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி.. நாளை வருகிறார்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Apr 2026 08:34 AM IST

சென்னை, ஏப்ரல் 17 : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் (2026 Tamil Nadu Assembly Election) காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, நாளை (ஏப்ரல் 18, 2026) சென்னை தமிழக வர உள்ளார். ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளாமல் இருந்தது பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது அவரது வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ்

ஏப்ரல் 23, 2026 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி, திமுக உடன் இணைந்து சந்திக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது பேசுபொருளாக மாறியது.

இதையும் படிங்க : “எந்த மாநிலத்தின் உரிமையும் பறிபோகாது”.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் உறுதி!

ராகுல் காந்தியின் பயண திட்டத்தை உறுதி செய்த காங்கிரஸ் வட்டாரம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ராகுல் காந்தி தவெக உடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், ஆனால் திமுக உடன் கூட்டணி அமைந்ததால் அவர் தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வராமல் புறக்கணிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் ராகுல் காந்தியின் தமிழக தேர்தல் பிரசார திட்டத்தை காங்கிரஸ் கட்சி வட்டாரம் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா தாக்கல்.. தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு

அதாவது நாளை (ஏப்ரல் 18, 2026) மற்றும் ஏப்ரல் 20, 2026 அன்று ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us