Vellore Constituency Election 2026: திமுகவின் கோட்டையாக இருக்கும் வேலூர் சட்டமன்ற தொகுதி.. மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?
Tamil Nadu Elections 2026: வேலூர் தொகுதி அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகம் வலுவாக உள்ள பகுதியாக கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை திமுக 5 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால், வரவிருக்கும் தேர்தலிலும் திமுகக்கு சாதகமான சூழல் உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஏப்ரல் 16, 2026: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய சூழலில், வேலூர் சட்டமன்ற தொகுதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வேலூர் சட்டமன்ற தொகுதி, வேலூர் மாவட்டம் அமைந்துள்ள ஒரு முக்கிய நகர்ப்புற தொகுதியாகும். இது வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பொது தொகுதி ஆகும். இந்த தொகுதியில் வேலூர் நகரம், சத்துவாச்சேரி, காகிதபாளையம், சின்னகள்ளாறு உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகள் அடங்கும். கல்வி, மருத்துவம், வணிகம் ஆகிய துறைகளில் வளர்ச்சி பெற்ற முக்கிய மையமாக வேலூர் திகழ்கிறது. இந்த தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தல் முடிவு:
திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் கார்த்திகேயன் சுமார் 84,299 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு 75,118 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி, நான்காவது இடத்தில் மக்கள் நீதி மையம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!
வேலூர் தொகுதி அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகம் வலுவாக உள்ள பகுதியாக கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை திமுக 5 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால், வரவிருக்கும் தேர்தலிலும் திமுகக்கு சாதகமான சூழல் உள்ளது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முக்கிய பிரச்சனைகள் என்ன?
ஆனால், மக்கள் தரப்பில் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக:
- அடிப்படை வசதிகள் பற்றாக்குறை
- போக்குவரத்து வசதி குறைவு
- குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிரச்சினைகள்
- நகர்ப்புற விரிவாக்க சவால்கள்
மேலும் படிக்க: மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!
2026 தேர்தல் நிலைமை:
திராவிட முன்னேற்றக் கழகம் தரப்பில் கார்த்திகேயன் மீண்டும் போட்டியிடுகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தரப்பில் எஸ்.ஆர்.கே. அப்பு போட்டியிடுகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.எம். வினோத் கன்னன், நாம் தமிழர் கட்சி சார்பில் சோனியா போட்டியிடுகின்றனர். மொத்தத்தில், வேலூர் சட்டமன்ற தொகுதி அரசியல் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது.