AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!

Tamilnadu Assembly Election: பாஜகவின் தாக்குதலில் இருந்து திமுகவும், இந்தியா கூட்டணி சகோதரர்களும் தமிழ்நாட்டை காத்து வருகிறார்கள். சமூக நீதி என்றால் என்னவென்று நாட்டிற்கே நாங்கள் காட்டியுள்ளோம். என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவினர் தாக்குவார்கள்

“தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!
பாஜகவிடம் அதிமுக தலைவர்கள் அடிபணிந்துள்ளனர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Apr 2026 13:04 PM IST

Tamilnadu Polls 2026: நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, ஆனால் தமிழ் மண்ணோடு நெருக்கமான உறவு உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொன்னேரியில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழ்நாட்டுக்கு தன் இதயத்தில் தனி இடம் உண்டு என்று கூறினார். நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தார்கள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்துடனே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அவ்வாறு, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சித்ததை முறியடித்திருக்கிறோம் என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

ராணுவம் இல்லாமல் தாக்குதல் நடத்தும் பாஜக:

தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்துவதே மத்திய பாஜக அரசின் திட்டம். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரே மதம் என்று கூறும்போது பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பேயே தாக்குகிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கு தங்கள் மொழி, கலாச்சாரத்தை காக்கும் உரிமை உள்ளது. ஒரு படை இல்லாமல் மக்களை தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் பாஜகவின் திட்டம். பண்டைய காலத்தில் ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், ராணுவம் இல்லாமல் அதே தாக்குதலை பாஜக நடத்துகிறது என்றார்.

பாஜக தமிழ்ர்கள் புரிந்துக் கொள்ளவில்லை:

மேலும், பாஜக, ஆர்எஸ்எஸ் இணைந்து தமிழ்நாட்டு மக்களை, தமிழ் மொழியை தாக்குகிறார்கள், அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தமிழ் மீது தாக்குதல் நடத்தும்போது எல்லாம் நான் தமிழனாகவே உணர்கிறேன். தமிழர்கள் யார் என்பதை பாஜக புரிந்துக் கொள்ளவில்லை. தமிழர்களுக்கு பல ஆயிரம் ஆண்டு வரலாறு, பாரம்பரியம் உள்ளது என்பது பாஜகவுக்கு புரியவில்லை. டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள, பாஜகவுக்கு இங்கு ஒரு கூட்டாளி வேண்டும். மோடி டிரம்பிடம் சரணடைந்தது போல், டெல்லியிடம் சரண்டையும் முதல்வர் வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. மோடி, அமித்ஷா உத்தரவை செயல்படுத்தும் ஒருவரை தமிழ்நாட்டின் முதல்வராக்க பாஜக நினைப்பதாக சாடினார்.

மேலும் படிக்க: கோவையில் மையமிடும் 3 துருவங்கள்.. மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

சமூகநீதியை நாட்டிற்கே காட்டியுள்ளோம்:

பாஜகவின் தாக்குதலில் இருந்து திமுகவும், இந்தியா கூட்டணி சகோதரர்களும் தமிழ்நாட்டை காத்து வருகிறார்கள். சமூக நீதி என்றால் என்னவென்று நாட்டிற்கே நாங்கள் காட்டியுள்ளோம். என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவினர் தாக்குவார்கள். அவர்களால் ஒருபோதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை தொட முடியாது. இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம், ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் எதிரொலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Follow Us