AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அதிமுக கூட்டணி 210 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்”.. இபிஎஸ் நம்பிக்கை!!

Tamil Nadu Assembly Election: நாங்களோ, எங்கள் கட்சி தலைவர்களோ டெல்லிக்குச் சென்றால், திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதலமைச்சரின் வாடிக்கையாக இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் கருத்துகளை பறிமாறிக்கொள்ள டெல்லி செல்கிறோம். தோல்வி பயத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின், நாங்கள் டெல்லிக்கு சென்றாலே அச்சப்படுகிறார் என்றார்.

“அதிமுக கூட்டணி 210 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்”.. இபிஎஸ் நம்பிக்கை!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Mar 2026 08:26 AM IST

Tamil Nadu Polls 2026: அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு நேற்றைய தினம் கையெழுத்தானது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு என மும்மரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதிமுகவில் 3 பெரிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.

இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

210 இடங்களில் நிச்சயம் வெல்வோம்:

இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவரும், அதன் கூட்டணி கட்சித்தலைவர்களும் எங்கள் கூட்டணி பற்றி விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி என்பது உணர்வுபூர்வமாக அமைக்கப்பட்ட கூட்டணி. எங்கள் கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 210 இடங்களில் நிச்சயம் வெல்லும். அதிக இடங்களில் வென்று, அதிமுக ஆட்சியமைக்கும்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்?:

தொடர்ந்து, அதிமுக எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. எல்லாம் இறுதி செய்யப்பட்ட தெரிவிப்போம் என்றார். அதோடு, அதிமுக கூட்டணியில் 20 நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டணியில் மற்ற கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக அறிவிப்போம் என்றார். 20 நாட்கள் அதிமுக, காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடந்தது. யாரும் அருவருத்து விலகவில்லை. எங்கள் கூட்டணியின் நோக்கம் மக்கள் துரோக திமுகவை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆகவே, உணர்வுப்பூர்வமாக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

டெல்லி சென்ற விமர்சனத்திற்கு பதிலடி:

நாங்களோ, எங்கள் கட்சி தலைவர்களோ டெல்லிக்குச் சென்றால், திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதலமைச்சரின் வாடிக்கையாக இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் கருத்துகளை பறிமாறிக்கொள்ள டெல்லி செல்கிறோம். தோல்வி பயத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின், நாங்கள் டெல்லிக்கு சென்றாலே அச்சப்படுகிறார் என்றார். மேலும், ஒரு கட்சி என்றால் ஆலோசனையில் ஈடுபடுவது வழக்கம் எனவும் கூறினார்.

இதையும் படிக்க: அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..

கனிமொழி டெல்லி சென்றது ஏன்?

கனிமொழி டெல்லிக்கு எதற்காக சென்றார்? காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசினாரே, முடிந்ததா? கூட்டணியில் அங்கம் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஆலோசனை நடத்துவது இயல்பு. திமுக கூட்டணி எப்படி இழுபறியில் இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். எங்களுடைய கூட்டணி தெளிவாக இருக்கிறது. அதிமுக சிறப்பான வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us