AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

Tamil Nadu Assembly Election 2026 : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மார்ச் 22, 2026 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு
Cpi M Gets Five Seats In Dmk Led Alliance
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Mar 2026 21:14 PM IST

சென்னை, மார்ச் 22 : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை இந்த முறை புதிதாக தேமுதிக இணைந்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவெட்டப்படாமல் இருந்த நிலையில் அந்த கட்சி கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கேற்ப அக்கட்சியைத் தேர்ந்த மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் திமுகவிற்கு எதிராக பேசி வந்தனர்.

இதையும் படிக்க : சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முடிவில் திடீர் மாற்றம்? பிரேமலதா எடுத்த அதிரடி முடிவு!

மேலும் தவெகவுடன் கூட்டணி சேரவுள்ளதாகவும் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் ஒரு வழியாக திமுக – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

 

இதனையடுத்து தவாக கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டதாகவும் ஆனால் அதற்கு திமுக தலைமை சம்மதிக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.  திமுகவும் தங்களது தொகுதிகளை குறைத்துக்கொள்வதாகவும் இதனால் கூட்டணி தர்மம் கருதி கூட்டணியில் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க : அன்று முதல் இன்று வரை.. மு.அப்பாவு கட்டுப்பாட்டில் ராதாபுரம் தொகுதி.. இந்த முறை எப்படி!

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியான அறிக்கையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்  முதல்வர் மு.க.ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளர் பெ.சண்முகமும் மார்ச் 23, 2026 அன்று  தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5  சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us