AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக கூட்டணியில் 5 இடங்களை ஏற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்? இன்று இறுதி முடிவு..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுத்துள்ளது. திமுகவுடன் நான்கு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

திமுக கூட்டணியில் 5 இடங்களை ஏற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்? இன்று இறுதி முடிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Mar 2026 15:55 PM IST

மார்ச் 23, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 21 கட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

திமுக – கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு:

குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி பங்கீடு பல கட்டங்களாக நடைபெற்றாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், மதிமுகவிற்கு 4 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றிற்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ரூ.3 கோடிக்கு லேண்ட் ரோவர்… கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட தகுதியில்லையா? ஓபனாக பேசிய பிரேமலதா!

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில், தேமுதிகவிற்கு இன்னும் சில நாட்களில் அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக பல கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால், ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அதிக அளவு தொகுதிகள் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5 இடங்கள் ஒதுக்கீடு:

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுத்துள்ளது. திமுகவுடன் நான்கு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. மார்க்சிஸ்ட் தரப்பில் 6 தொகுதிகளுக்கு குறைய ஏற்க முடியாது என கூறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், திமுக தரப்பில் 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள்.. பாமகவிற்கு 18 இடங்கள்..

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் கருத்துகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டுக்கொண்டு, இன்று தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

5 தொகுதிகளை ஏற்குமா?

அதே சமயம், பல ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறும் வாய்ப்பு குறைவு என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், திமுக வழங்கியுள்ள 5 தொகுதிகளை ஏற்கும் வாய்ப்பு அதிகம் எனவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலை வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us