AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள்.. பாமகவிற்கு 18 இடங்கள்..

NDA Alliance ADMK - BJP Seat Sharing: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் அரசியல் பலம் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது உடன்பாடு ஏட்டப்பட்டு இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள்.. பாமகவிற்கு 18 இடங்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Mar 2026 16:30 PM IST

சென்னை, மார்ச் 23, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் அரசியல் பலம் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது உடன்பாடு ஏட்டப்பட்டு இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் ஆகியவை முக்கிய அணிகளாக உள்ளன. இதில் பிரதானமான போட்டி அதிமுக மற்றும் திமுக இடையே நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இழுபறியாக உள்ளன. இதேபோல், அதிமுக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி – தொகுதி பங்கீடு:

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் தமிழகத்திற்கு வருகை தந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டன.

பாஜகவிற்கு 27 இடங்கள், பாமகவிற்கு 18 இடங்கள்:

அதன்படி, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 21 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அது 27 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. நாங்கள் டெல்லிக்கு செல்லும் போது எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்புவது வழக்கமாக உள்ளது. விரைவில் எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதையும் அறிவிப்போம்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் 5 இடங்களை ஏற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்? இன்று இறுதி முடிவு..

குக்கர் சின்னத்தில் தான் போட்டி:

அதேபோல், டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் கேட்ட தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மிகுந்த மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக அதிமுக அலுவலகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறேன். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வரும்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இருப்பை உணர முடிகிறது. ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 2026 தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்; ஆனால் ‘குக்கர்’ சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்” என தெரிவித்தார்.

திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்:

மேலும், அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “திமுகவை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு எந்த பெரிய நன்மையும் கிடைக்கவில்லை. எனவே இந்த முறை திமுக ஆட்சி முடிவுக்கு வரும்” என குற்றம்சாட்டினார்.

 

 

Follow Us