AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முருகன் பாடலை பாடி திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான்..

பின்னர் பேசிய சீமான், திமுக அரசை விமர்சித்து, “2026ஆம் ஆண்டு மே மாதம் வரும்போது மட்டும் 500 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம், மின்கட்டண உயர்வு போன்றவற்றின் மூலம் அத்தியாவசிய செலவுகளை அதிகரித்து, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என மக்களுக்கு வழங்குகிறார்கள். பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றும், அரசு செயல்படுத்திய ஒரு பெரிய நலத்திட்டத்தை காட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

முருகன் பாடலை பாடி திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 23 Mar 2026 20:18 PM IST

திருத்தணி, மார்ச் 23, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருத்தணியில் இருந்து தொடங்கியுள்ளார். பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன், அவர் திருத்தணி முருகன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், முருகன் பாடலைப் பாடி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவற்றுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

நாம் தமிழர் கட்சியை எடுத்துக்கொண்டால், கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை எந்த தேர்தலிலும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. அதேபோல், வரவிருக்கும் தேர்தலிலும் தனித்தே போட்டியிடும் என்று சீமான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

தேர்தலுக்கு ஆயத்தமாகும் நாம் தமிழர் கட்சி:

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள நட்சத்திரப்படுதி பகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.

திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான்:

இதனைத் தொடர்ந்து, மார்ச் 23ஆம் தேதி முதல் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அப்போது முருகன் பாடலைப் பாடிய சீமான்,
“வேலோடு வாடா என் முப்பாட்டன் முருகா… உன் தமிழோடு உன் பேரன் நான் வாரேன்” எனப் பாடினார்.

மேலும் படிக்க: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் – திமுகவிற்கு எத்தனை தொகுதிகள்? வெளியான அறிவிப்பு

மேலும், திருத்தணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரனுக்கு ‘விவசாயி’ சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

திமுக அரசை விமர்சித்த சீமான்:

பின்னர் பேசிய சீமான், திமுக அரசை விமர்சித்து, “2026ஆம் ஆண்டு மே மாதம் வரும்போது மட்டும் 500 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம், மின்கட்டண உயர்வு போன்றவற்றின் மூலம் அத்தியாவசிய செலவுகளை அதிகரித்து, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என மக்களுக்கு வழங்குகிறார்கள். பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றும், அரசு செயல்படுத்திய ஒரு பெரிய நலத்திட்டத்தை காட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: தஞ்சாவூரில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர் – சிகிச்சை பலனின்றி மரணம்

மேலும் அவர், “திமுக ஆட்சியில் சாராயக் கடைகள் இருக்கும்; அதிமுக ஆட்சியில் அவை மூடப்படுமா? மூடப்படாது. திமுக ஆட்சியில் ஊழல், லஞ்சம் இருக்கும்; அது அதிமுக ஆட்சியிலும் தொடரும். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறும்; அதேபோல் அதிமுக ஆட்சியிலும் தொடரும்” எனவும் குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை வேலூர் மாவட்டத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

Follow Us