AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் – திமுகவிற்கு எத்தனை தொகுதிகள்? வெளியான அறிவிப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும்,திமுக 12 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை  தலா 1 தொகுதியில் போட்டியிட உள்ளன

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் – திமுகவிற்கு எத்தனை தொகுதிகள்? வெளியான அறிவிப்பு
புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Mar 2026 19:08 PM IST

புதுச்சேரி, மார்ச் 22:  புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய மாரச் 22, 2026 இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாமல் இருந்தது. இதனால் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.  காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும்,திமுக 12 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை  தலா 1 தொகுதியில் போட்டியிட உள்ளன.

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதீப் பங்கீடு

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக மற்றும் காங்கிஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு  ஏற்படாமல் இருந்தது. மேலும் மார்ச் 22, 2026 அன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் திமுக தனித்து போட்டியிட திட்டமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூக உடன்பாட்டை எட்டியுள்ளது.

இதையும் படிக்க : என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த அதிமுக துணை செயலர்… புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!

அதன் படி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 12 தொகுதிகளிலும் போட்டியடவிருக்கின்றன.மேலும் விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 1 இடங்களில் போட்டியிடவிருக்கின்றன.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9, 2026 அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைக்கும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. இந்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் ஆட்சியை கப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதையும் படிக்க  : தவெக வேட்பாளர் தேர்வு தீவிரம்.. நாளை பனையூர் அலுவலகத்திற்கு வர 115 பேருக்கு விஜய் அழைப்பு..

ஆனால் தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 22, 2026 அன்று கடைசி தேதி என்பதால் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்ததது. இதனயைடுத்து இரு கட்சிகளில் இருந்தும் ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு பெற்ற வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 26, 2026 அன்று கடைசி தேதி என்பதால் அன்றைக்குள் சமூக முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் ஒருவழியாக தற்போது தொகுதி பங்கீட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

Follow Us