AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி.. தவெகவில் தஞ்சமடைந்த மாற்று கட்சியினர்!

Members From Several Parties Joined In Tamilaga Vettri Kazhagam | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்தவர்கள் சீட் கிடைக்காததால் தவெகவில் இணைந்துள்ளனர்.

புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி.. தவெகவில் தஞ்சமடைந்த மாற்று கட்சியினர்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Mar 2026 08:36 AM IST

புதுச்சேரி, மார்ச் 22 : புதுச்சேரியில் (Puducherry) போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK – Tamilaga Vettri Kazhagam) முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்த நிலையில், மேலும் பலர் தவெகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் போட்டியிட சீட் கிடைக்காத நிலையில், தவெகவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகம், புதுச்சேரியில் தனித்து போட்டியிடும் தவெக

தமிழகம், புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டு மாநிலங்களிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்கிறார்.

இதையும் படிங்க : தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய தவெக? – தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் 30 வேட்பாளர்களை நிறுத்தும் கட்டாயத்தில் தவெக

இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் போட்டியிட சீட் கிடைக்காத பாரதிய ஜனதா கட்சியினர், என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் வேறு சில கட்சிகளில் இணைந்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக கட்சியில் சீட் கிடைக்காத பிரமுகர்களை வேறு கட்சிகள் அழைப்பது வழக்கம். அந்த வகையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதால், அவர் செல்போன் மூலம் ஒரு அரசியல் கட்சி பிரமுகருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டி.. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

வேறு கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்த பிரமுகர்கள்

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியில் (BJP – Bharatiya Janata Party) இருந்து வெளியேறிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) இருந்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்களான பெரியசாமி, அசனா, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆகியோர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மேலும் சில அரசியல் கட்சி பிரமுகர்கள் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us