AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டி.. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!!

Puducherry Assembly Election: சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் ஏற்கனவே புதுச்சேரி சட்டடமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி பட்டியலைத் தயார் செய்துள்ளார். இதில் குறிப்பாகப் படித்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

புதுச்சேரியில் தவெக தனித்துப் போட்டி.. நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!!
விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Mar 2026 20:03 PM IST

Puducherry Polls 2026: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நாளை தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வுப் பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புதுச்சேரியில் தங்கி இறுதி செய்து வருகிறார்.

இதையும் படிக்க: புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி.. முழு விவரம் இதோ!

வேட்பாளர் தேர்வு முறை:

சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் ஏற்கனவே விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி பட்டியலைத் தயார் செய்துள்ளார். இதில் குறிப்பாகப் படித்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜகவில் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் வெளியேறிய முன்னாள் அமைச்சர் சாய் சரவணகுமார் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ நேருவின் ‘நம் மக்கள் கழகம்’ உள்ளிட்ட அமைப்புகள் தவெக-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளன. இது தவெக-விற்குப் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

வெற்றி வாய்ப்புகள்:

புதுச்சேரியில் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் (மாகி மற்றும் ஏனாம் தவிர்த்து) ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 2,000 முதல் 4,000 வாக்குகள் வரை தவெகவிற்கு இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கணிக்கின்றனர். குறிப்பாக 35 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறை வாக்காளர்கள் விஜய்யின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அக்கட்சியசினர் மத்தியில் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: “தமிழ்நாடு vs டெல்லி”.. நாம் சொன்னது போலவே முடிவெடுப்பது டெல்லிதான்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!

தவெக தனித்து போட்டி:

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தின் சொந்த மாநிலம் புதுச்சேரி என்பதால், அங்குள்ள தேர்தல் பொறுப்புகள் முழுவதும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தனியார் நட்சத்திர விடுதியில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைக்கும் என்று பல்வேறு அரசியல் யூகங்கள் எழுந்தன. ஆனால், என்.ஆர். காங்கிரஸ் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துவிட்டதால், விஜய் தற்போது தனித்து களம் காண முடிவெடுத்துள்ளார். இது புதுச்சேரியின் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us