AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழ்நாடு vs டெல்லி”.. நாம் சொன்னது போலவே முடிவெடுப்பது டெல்லிதான்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!

Tamil Nadu vs Delhi: தமிழ்நாட்டில் வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் என்ன என்ற மனநிலையுடன் என்டிஏ கூட்டணி உள்ளதாக கூறிய அவர், தேர்தல் களத்தை சந்திக்கவே டெல்லியின் சம்மதம் தேவை என்ற நிலையில் அதிமுக உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

“தமிழ்நாடு vs டெல்லி”.. நாம் சொன்னது போலவே முடிவெடுப்பது டெல்லிதான்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Mar 2026 10:31 AM IST

சென்னை, மார்ச் 20: தமிழ்நாடு vs டெல்லி என்று நாம் சொன்னது போலவே டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, இன்றைய தினம் டிடிவி தினகரனும், அன்புமணி ராமதாஸும் டெல்லி சென்றுள்ளனர்.

இதையும் படிக்க: “இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரியும்”.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ் பளீர்!!

டெல்லியில் இன்று முடிவு:

டெல்லியில் இன்று அமித்ஷா தலைமையில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதில், குறிப்பாக எந்தெந்த கட்சிகள் எந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் இன்றையே தினமே ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதில், அதிமுக பலமாக உள்ள தொகுதிகளை பாஜக கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

விட்டுக் கொடுத்து செல்வோம்:

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, அதிமுக பலமாக இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்பதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவ்வாறு கேட்டாலும், அதிமுக விட்டுக்கொடுக்கும் என்றும் கூறியிருந்தார். அதேபோல், எடப்பாடி பழனிசாமியும், விட்டுக்கொடுத்து செல்வோம் என்று இன்று காலை தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்:

எடப்பாடி பழனிசாமியும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? என்று அவர் கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் உரிமைகளை காப்பாற்றவோ? சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவோ எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவில்லை. நிதிகளை பெற்றுத் தரவோ, முடங்கிய திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தவோ செல்லவில்லை என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு vs டெல்லி:

தமிழ்நாட்டில் வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் என்ன என்ற மனநிலையுடன் என்டிஏ கூட்டணி உள்ளதாக கூறிய அவர், தேர்தல் களத்தை சந்திக்கவே டெல்லியின் சம்மதம் தேவை என்ற நிலையில் அதிமுக உள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழ்நாடு vs டெல்லி என்று நாம் சொன்னது போலவே டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : அதிமுகவினரை திமுகவில் இணைப்பதற்கு திடீர் தடை… பாஜகவை மனதில் வைத்து தலைமை உத்தரவு? முழு விவரம் என்ன!

மேலும் தமிழக மக்கள் டெல்லி ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், இப்படிப்பட்டவர்களிடம் தமிழ்நாடு சிக்கிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் மக்கள் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us