AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய தவெக? – தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு

TVK Campaign Controversy : வருகிற ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் பிரச்சாரத்திற்கு சிறுவர்களை பயன்படுத்தியதாக தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய தவெக? – தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு
தவெக மாவட்ட செயலாளர் மலர்விழி - விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Mar 2026 21:00 PM IST

ராமநாதபுரம், மார்ச் 21 : வருகிற ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரூ.50,000க்கு மேற்பட்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

தவெக பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதால் பரபரப்பு

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை முன்னிலட்டு பரபரப்பாகி வருகின்றன. மேலும், வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத போதிலும் கட்சிகள் தங்களது பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், உத்திரமங்கை என்ற பகுதியில், தவெக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி என்பவரும் மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் சேர்ந்து, சிறுவர்களை பயன்படுத்தி திமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிக்க : K.N.Nehru Tamil Nadu Election: கே.என்.நேருவின் கோட்டையாக தொடருமா திருச்சி மேற்கு தொகுதி!

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி தேர்தல் அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகளின்படி, சிறுவர்களை அரசியல் பிரசாரங்களில் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும் என்பதால், இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து, மலர்விழி மற்றும் அவருடன் தொடர்புடைய சில கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தவெக சின்னம் பொறிக்கப்பட்ட வாட்டர் பாட்டில் பறிமுதல்

மேலும், இந்த நிலையில் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் மார்ச் 21, 2026 அன்று காலை ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்த வந்தனற். அப்போது அங்கு வந்த தவெக நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் தங்களிடம் இருந்த வாட்டர் பாட்டில்களை இஸ்லாமியர்களுக்கு வழங்கினர். அதில் தவெக பெயர், சின்னம் ஆகியவை இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தேர்தல் அதிகாரிகள் 500க்கும் மேற்பட்ட வாட்டர் பாட்டில்களை கைது செய்ததோடு தவெகவினரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : திருச்சி கிழக்கு தொகுதிக்கு மும்முனை போட்டி… மதிமுகவின் பலே திட்டம்… எந்த கட்சிக்கு ஒதுக்கும் திமுக!

தேர்தல் காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இத்தகைய விதி மீறல்கள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தவெகவினர் புதிதாக தேர்தலை சந்திப்பதால் அவர்கள் இது போன்ற சிக்கலை அடிக்கடி சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow Us