AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

K.N.Nehru Tamil Nadu Election: கே.என்.நேருவின் கோட்டையாக தொடருமா திருச்சி மேற்கு தொகுதி!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது முதல் 9 சட்டமன்ற தேர்தல்களில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி மற்றும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி வாய்ப்பை பெற்ற கே.என்.நேரு இந்த முறையும் வெற்றியை தக்க வைத்துக் கொள்வாரா.

K.N.Nehru Tamil Nadu Election: கே.என்.நேருவின் கோட்டையாக தொடருமா திருச்சி மேற்கு தொகுதி!
திருச்சி மேற்கு தொகுதியை தக்கவைத்துக் கொள்வாரா கே.என்.நேரு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 21 Mar 2026 11:53 AM IST

திமுகவில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்து வருபவர் கே. என். நேரு. இவர், கடந்த 1952- ஆம் ஆண்டு நவம்பர் 9- ஆம் தேதி நாராயணசாமி- தனலட்சுமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். பின்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. அது முதல் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கே. என். நேரு கடந்த 1989- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் களமிறங்கி தனது முதல் வெற்றியே பதிவு செய்து சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதிகள் களமிறங்கிய கே. என். நேரு 2- ஆவது வெற்றியை பதிவு செய்தார். அவரை திமுகவினர் புள்ளம்பாடியார் என்று அன்பாக அழைப்பதுண்டு.

போக்குவரத்து துறை அமைச்சர் பதவியில் கே.என்.நேரு

இதில், கடந்த 2006 முதல் 2011- ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, திமுகவின் முதன்மைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர், கடந்த 1989- ஆம் ஆண்டு லால்குடி தொகுதியில் ஏடிகே (ஜே எல்) கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசு சாமியை தோற்கடித்து 45.95 சதவீத வாக்குகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தார். 1991 சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் களமிறங்கிய கே. என். நேரு தோல்வியை சந்தித்தார். 1996 சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் களம் இறக்கப்பட்ட கே. என். நேரு எதிர்க்கட்சி வேட்பாளர் ஜே. லோகம்பல்லை வீழ்த்தி 68.47 சதவீத வாக்குகள் பெற்றார்.

மேலும் படிக்க: P. Dhanapal Tamil Nadu Election: சபாநாயகர் பதவியில் தடம் பதித்தவர்.. 7 முறை தொடர் வெற்றியாளர்.. அவினாசி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா தனபால்!

திருச்சி மேற்கு தொகுதியில் களமிறங்கிய கே.என்.நேரு

பின்னர், கடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கிய கே.என். நேரு அதிமுக வேட்பாளர் எஸ்.எம். பாலனிடம் தோல்வியை தழுவினார். கடந்த 2006 தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதிக்கு மாறி போட்டியிட்ட கே. என். நேரு அதிமுக வேட்பாளர் எம். மரியம் பிச்சையை வீழ்த்தி 49.37 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி தக்க வைத்துக் கொண்டார். 2011 தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய அவர் அதிமுக வேட்பாளர் எம். மரியம் பிச்சையிடம் தோல்வியை தழுவினார். 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரனை வீழ்த்தி 51 .30 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதே தொகுதியில் மீண்டும் களமிறக்கப்படும் கே.என்.நேரு

இதேபோல கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் களமிறங்கிய கே. என். நேரு அதிமுக வேட்பாளர் பி. பத்மநாதனை வீழ்த்தி 67.02 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். வருகிற தேர்தலில் இதே தொகுதியில் கே. என். நேரு களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலிலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: S.P. Velumani Tamil Nadu Election: தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா எஸ்.பி.வேலுமணி!

Follow Us