AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

P. Dhanapal Tamil Nadu Election: சபாநாயகர் பதவியில் தடம் பதித்தவர்.. 7 முறை தொடர் வெற்றியாளர்.. அவினாசி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா தனபால்!

Tamil Nadu Elections 2026: அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த போது தடம் பதித்ததுடன், சங்ககிரி மற்றும அவினாசி தொகுதியில் தொடர்ச்சியாக 7 முறை வெற்றியை பதிவு செய்து வரும் பி. தனபால் மீண்டும் அவினாசி தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா.

P. Dhanapal Tamil Nadu Election: சபாநாயகர் பதவியில் தடம் பதித்தவர்.. 7 முறை தொடர் வெற்றியாளர்.. அவினாசி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா தனபால்!
அவினாசி தொகுதியை தக்கவைத்துக் கொள்வாரா பி.தனபால்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 20 Mar 2026 17:03 PM IST

அதிமுக ஆட்சி காலத்தில் சட்டப்பேரவை தலைவராகவும், தற்போதைய எம்எல்ஏவாகவும் இருந்து வருபவர் பி. தனபால். இவர், கடந்த 1951- ஆம் ஆண்டு மே மாதம் 16- ஆம் தேதி பழனி என்பவருக்கு மகனாக பிறந்தார். பட்டப் படிப்பு படித்துள்ள இவர், அரசியல் ஈடுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்தார். இதில், கடந்த 1977- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம். பரமானந்ததை விட 53.27% வாக்குகள் பெற்று தனது முதல் வெற்றிய பதிவு செய்ததுடன், எம்எல்ஏவாக தேர்வாகி சட்டமன்றத்தில் முதல் அடியை எடுத்து வைத்தார். பின்னர், 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர். வரதராஜனை தோற்கடித்து 56.61% வாக்குகளை பெற்றார்.

3- ஆவது முறையாக எம்எல்ஏவான பி.தனபால்

இதைத் தொடர்ந்து, 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் எல். முருகேசனை வீழ்த்தி 56.99 சதவீத வாக்குகள் பெற்று 3- ஆவது முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார் தனபால். பின்னர், 1989- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர். வரதராஜனிடம் தோல்வியை தழுவினார். இதைத் தொடர்ந்து 2001- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி. ஆர். சரவணன் வீழ்த்தி 56.41 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியை நிலை நிறுத்தினார்.

மேலும் படிக்க: “10+1 சீட்கள் கேட்டு விசிக பிடிவாதம்”.. இறங்கி வருமா திமுக?.. கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி..

தொகுதி மாறினாலும்  வெற்றி மாறவில்லை

கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் மாறி களமிறங்கிய தனபால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி. பி. துரைசாமியை வீழ்த்தி 55 .60 சதவீத வாக்குகள் பெற்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் களமிறங்கிய தனபால் திமுக வேட்பாளர் இ. ஆனந்தனை வீழ்த்தி 48.11 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். இதே போல, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அதியமான் ராஜூவை வீழ்த்தி 55.78 வாக்குகள் பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

அவினாசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு

இவரது அரசியல் காலத்தில் இந்த 2001- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2011- ஆம் ஆண்டு சட்டப்பேரவையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பி. தனபால் மீண்டும் இதே தொகுதியில் களம் இறக்கப்படுவார் என்றே தெரிகிறது. தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ள இவருக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வந்து சேரும் என்று அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் எதிர்க் கட்சிகள் சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்களை பொறுத்து கள நிலவரம் மாறுபட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: இறுதி கட்டத்தை எட்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. அதிமுக – 162 இடங்கள், பாஜக – 31 இடங்கள்? பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதி?

Follow Us