S.P. Velumani Tamil Nadu Election: தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா எஸ்.பி.வேலுமணி!
Tamil Nadu Elections 2026 : அதிமுகவில் தொண்டனாக இணைந்து எம் எல் ஏ, அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவரும், வகித்து வருபவருமான தொண்டாமுத்தூர் தொண்டன் என்று அழைக்கப்படும் எஸ்.பி.வேலுமணி மீண்டும் தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றித் தடம் பதிப்பாரா.
அதிமுகவில் தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருபவர் எஸ். பி. வேலுமணி. இவர், கடந்த 1969- ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி பழனிச்சாமி – மயிலாத்தாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அதிமுகவில் தொண்டனாக இணைந்த எஸ். பி. வேலுமணி குனியாமுத்தூர் நகர் மன்ற தலைவராக ஆரம்பத்தில் நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பேரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்பி வேலுமணி களமிறக்கப்பட்டார். அதில், தனது முதல் வெற்றியை பதிவு செய்து சட்டமன்றம் சென்றார். இதேபோல, 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் களமிறங்கிய எஸ். பி. வேலுமணி அடுத்தெடுத்து தனது வெற்றியை பதிவு செய்து வந்தார். தற்போது, திமுகவின் மாநில அமைப்பு செயலாளராகவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும், கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.
பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அவர்களது அமைச்சரவைகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இதே போல, சிறப்பு திட்ட செயலாக்கம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் பேரூர் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கி எஸ். பி. வேலு மணி தன்னை எதிர்த்தி போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 1 லட்சத்து 14,633 .41 சதவீதம் வாக்குகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தார்.




தொடர் வெற்றியில் திளைத்த எஸ்.பி. வேலுமணி
இதே போல, கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மாறி களம் இறங்கிய எஸ். பி. வேலுமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம். என். கந்தசாமியை விட 62.40 சதவீத வாக்குகள் பெற்று 2- ஆவது வெற்றியை பதிவு செய்தார். இதேபோல. 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளரை வீழ்த்தி 55.01 சதவீத வாக்குகள் பெற்று எஸ். பி. வேலுமணி மீண்டும் வெற்றியை உறுதி செய்தார்.
தொண்டாமுத்தூரில் களமிறக்கப்படும் எஸ்.பி.வேலுமணி
பின்னர், கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கார்த்திகேயனை வீழ்த்தி ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 375 ( 53.89 சதவீதம்) வாக்குகள் பெற்று எம். எல். ஏ. பதவியை தக்க வைத்துக் கொண்டார். தொண்டாமுத்தூர் தொண்டன் என்று அன்போடு அழைக்கப்படும் எஸ்.பி.வேலுமணி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், தொகுதியில் வெற்றி அவருக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.