AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீண்ட இழுபறிக்கு பின் தீர்வு… திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. உத்தேச பட்டியலும் வெளியீடு!

Vck Seat Sharing: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 6 தனி தொகுதிகள் மற்றும் 2 பொது தொகுதிகள் என 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது .

நீண்ட இழுபறிக்கு பின் தீர்வு… திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. உத்தேச பட்டியலும் வெளியீடு!
திமுக-விசிக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 24 Mar 2026 13:04 PM IST

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இதில், விசிகவை தவிர மற்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஒன்றிரண்டு தொகுதிகளை குறைத்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் விதிவிலக்காக கடந்த தேர்தலை விட 3 தொகுதிகள் அதிகமாக 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதனால், தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று மற்ற கட்சிகள் போர்க்கொடி தூக்கியிருந்தன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தனி தொகுதிகள் மற்றும் 2 பொது தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கி உள்ளது. இதற்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி உத்தேச பட்டியல்

இதை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடக் கூடிய தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை திமுக தலைமையிடம் தொல். திருமாவளவன் அளித்தார். அதில்,

மேலும் படிக்க: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் தடுத்து நிறுத்தம்.. தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை.. முழு விவரம் என்ன!

  • செய்யூர்
  • புவனகிரி
  • காட்டுமன்னார்கோவில்
  • குன்னம்
  • பெரியகுளம்
  • வானூர் அல்லது திண்டிவனம்
  • நாகப்பட்டினம்
  • அரூர்
  • கள்ளக்குறிச்சி
  • மயிலம்
  • சிவகங்கை
  • கே வி குப்பம்

ஆகிய 12 சட்டமன்ற தொகுதிகளை தங்களது விருப்ப பட்டியலில் விசிக குறிப்பிட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் திமுக தலைமை மேற்கொண்டு, விசிகவுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் என்று தெரிகிறது. இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் அரசியல் பயணம் மேற்கொண்டிருந்தாலும், தற்போதும் இந்த அரசியல் களம் புதிதாக இருப்பதாகவும், கூட்டணி தலைமையிடம் தங்களுக்கான தொகுதிகளை வற்புறுத்தி வாங்கும் நிலை உள்ளதாக விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு

இந்த நிலையில், புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், திமுகவுடன், தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்றுள்ளது. தற்போது, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அது குறித்த விவரம்:

  • காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள்
  • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள்
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
  • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 4 தொகுதிகள்

என சுமார் 50 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு மட்டும் தொகுதிகள் பங்கீடு செய்யப்படாமல் உள்ளது. இந்த கட்சிக்கும் விரைவில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்.. நாளை முதல் சூறாவளிப் பிரச்சாரம் தொடக்கம்?

Follow Us