AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்.. நாளை முதல் சூறாவளிப் பிரச்சாரம் தொடக்கம்?

Tamil Nadu Assembly Election: தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு, தேர்தல் வாக்குறுதிகளும் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்.. நாளை முதல் சூறாவளிப் பிரச்சாரம் தொடக்கம்?
விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Mar 2026 11:58 AM IST

Tamil Nadu Polls 2026: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. அதனைத்தொடர்ந்து, சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திமுக, அதிமுக, நாதக உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் தடுத்து நிறுத்தம்.. தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை.. முழு விவரம் என்ன!

பலன் கொடுக்காத விஜய்யின் ஆஃபர்கள்:

தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதன்படி திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் புதிதாக களம் காண இருக்கிறது. தனது முதல் மாநில மாநாட்டிலேயே “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. புதிய கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்க ஆஃபர்களை அள்ளி வீசியும் அக்கட்சியுன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை. இதனால், விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு வாக்குகளாக மாறுமா? என்பது இந்தத் தேர்தலில் தான் தெரியும். எனவே, ஏற்கனவே பல தேர்தல்களைச் சந்தித்து அனுபவம் வாய்ந்த கட்சிகள், ஒரு புதிய கட்சியுடன் இணைந்து ரிஸ்க் எடுக்கத் தயங்குகின்றன.

வலுவாக உள்ள பிரதான கூட்டணி கட்சிகள்:

அதோடு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள பிரதான கூட்டணிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் மிகவும் வலுவாக உள்ளன. குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக போன்ற கட்சிகள் தங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை எதிர்கொள்ள ஓரணியிலேயே நீடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. அதேசமயம், தவெக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அதோடு, “மக்களுடன் தான் கூட்டணி” என்ற பாணியில் விஜய் செயல்படுவதால், மற்ற கட்சிகள் தானாக முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி?:

இந்நிலையில், தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு, தேர்தல் வாக்குறுதிகளும் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, கொடுங்கையூரை அடுத்த கண்ணதாசன் நகரில் விஜய் தங்கியிருந்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பங்களா ஒன்று விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அந்த பங்களாவில் நாளை (மார்ச் 25) காலை பூஜை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு

நாளை பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்:

இந்த பூஜையில் பங்கேற்கும் விஜய், பெரம்பூர் தொகுதியில் நாளையே பிரச்சாரத்தையும் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க இருக்கிறார். அதன்பின், வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதிகள் என அடுத்தடுத்த விவகாரங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படகிறது. ஏற்கெனவே, சென்னை நந்தனத்தில் உள்ள அக்கட்சியின் ஐடி விங் அலுவலகத்திற்கு அடிக்கடி வருகை தரும் விஜய், தேர்தல் பணிகளை தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us