AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரு உயிர்களை பறித்த கள்ளக்காதல்.. புதுச்சேரியில் கர்ப்பிணி அடித்து கொலை.. பரபரப்பு பின்னணி!

Puducherry Woman Beaten To Death : புதுச்சேரி மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் 3 மாத கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இரு உயிர்களை பறித்த கள்ளக்காதல்.. புதுச்சேரியில் கர்ப்பிணி அடித்து கொலை.. பரபரப்பு பின்னணி!
மாதிரிப் புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Jun 2026 17:08 PM IST

புதுச்சேரி மாநிலம், திலகர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராஜமாதங்கி ( 25 வயது). சரவணன், சென்னையில் திருமண போட்டோகிராபராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2- ஆம் தேதி ராஜமாதங்கியை தலையில் பலத்த காயத்துடன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரித்தனர். அப்போது, தன்னுடன் வந்தவர் தனது கணவர் சரவணன் என்றும் முருகா தியேட்டர் அருகில் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளித்ததுடன், 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

கர்ப்பிணியில் உடல் முழுவதும் பலத்த காயம்

அப்போது, தனக்கு உடல்நிலை சரியாக இருப்பதாகவும், தலையில் ஏற்பட்ட காயத்துக்கு மட்டும் சிகிச்சை பெற்று விட்டு அந்த நபருடன் திலகர் நகரில் உள்ள வீட்டுக்கு ராஜமாதங்கி சென்று விட்டார். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அவரது தாய் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் முழுவதும் காயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகம் அடைந்த போலீசார் கோரிமேடு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: டாஸ்மாக் பார் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை.. தப்பியோடிய நண்பர்களுக்கு வலைவீச்சு.. நெல்லையில் பயங்கரம்!

போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி ராஜமாதங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரித்ததில் முருகா தியேட்டர் அருகே எந்த விபத்தும் நிகழவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், ராஜ மாதங்கியுடன் வந்த நபர் குறித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதில், அவர் சின்ன கோட்டக் குப்பத்தை சேர்ந்த சுரேந்திரன் ( 29 வயது) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராஜமாதங்கியுடன் பள்ளி பருவத்தில் உடன்படித்த சுரேந்திரனை காதலித்து வந்துள்ளார்.

கர்ப்பிணி பெண் அடித்து கொலையா

இந்த காதலை ஏற்காத மாதங்கியின் பெற்றோர் சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2- ஆம் தேதி ராஜ மாதங்கி தொடர்பு கொண்டு சுரேந்திரன் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில், ஆத்திரம் அடைந்த, மாதங்கி அவரது வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, அவரது தாயை மாதங்கி திட்டியதாக தெரிகிறது. இதில், அவரை சுரேந்திரன் தாக்கிய போது, அங்கிருந்து ஓடுகையில் தவறி விழுந்து தலையில் பட்டதும், இதில் உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும், அந்த பெண்ணை அடித்து கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாமல் மீட்கப்பட்ட ஆண் சடலம்.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்..

Follow Us