மக்களுக்கு இடையூறு – தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை
பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன் படி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் கொண்டாட்டம் கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை, மே 12 : பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன் படி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் கொண்டாட்டம் கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தலைவருக்கு தமிழ்நாட்டின் முதல்வர் என்ற மிகப் பெரிய பொறுப்பை மக்கள் கொடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை
பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவுடன் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் முதன்முறையாக விஜய் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது குட்டிக்கதை ஒன்றையம் தெரிவித்திருந்தார்.




இதையும் படிக்க : தவெகவுக்கு ஆதரவு – எஸ்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்
இந்த நிலையில் திருக்கோவிலூரில் தவெக மாவட்ட செயலாளர் பரணி பாலாஜியின் பிறந்த நாளை அக்கட்சி தொண்டர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். அப்போது சாலையில் அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் தவெக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய தமிழ்நாடு முதல்வர் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
தவெக அறிவிப்பு
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய…
— TVK Party HQ (@TVKPartyHQ) May 12, 2026
இதையும் படிக்க : தவெகவுக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் நடவடிக்கை – உறுப்பினர்களுக்கு அதிமுக எச்சரிக்கை
எனவே, தவெகவினர் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் தவெக தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.