காதர் மொய்தீன் – செல்வப்பெருந்தகையுடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு.. அரசியல் நாகரீகம் என புகழாரம்!
Chief Minister Joseph Vijay : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர முதல் அமைச்சர் சி. ஜோசப் விஜய் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னை மண்டியில் உள்ள யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தினை விஜய் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் கூறியதாவது: 17-வது சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலையில் இருந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்து நன்றியை தெரிவித்தார். தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு பதவி ஏற்ற நாள் முதல் தற்போது வரை சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து தனது அன்பை பரிமாறி கொண்டு வருகிறார். இது தமிழக அரசியலில் வரவேற்கப்படக்கூடியதாகும். இந்த முறை தமிழக அரசியலில் தொடர்ந்து நீடிக்க பட வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு தொடரும்
தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 3.5 சதவீத இட ஒதுக்கீடு தற்போது வரை உள்ளது. தற்போது புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசிலும் இந்த ஒதுக்கீடு தொடர்ந்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு பெற்றுள்ளனர். வருங்காலங்களில் இது அதிகரிக்கும். கல்வித்துறை மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது பொதுவாக 5 அல்லது 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
மேலும் படிக்க: தவெகவுக்கு ஆதரவு – எஸ்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்




தவெகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு
தற்போதைய அரசியல் களத்திலும் இந்த கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துவோம். இந்த ஒதுக்கீட்டை வலியுறுத்தி பெறுவதற்கான முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடுவோம். தமிழக மக்களுக்கு புதிய அரசு நல்லது செய்ய வேண்டும் எண்ணம் இருப்பதால் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தவெகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு அளித்துள்ளோம். திமுகவின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சந்திப்பு
அந்தத் திட்டங்கள் தற்போதைய ஆட்சியிலும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் 5 ஆண்டு காலம் ஆட்சி செய்வதற்காகவே நாங்கள் நிபந்தனை என்ற ஆதரவு அளித்துள்ளோம். அதிமுகவில் பிளவு பட்டதாக சிலர் கூறுகின்றனர். அது போன்று கட்சி சார்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. இதே போல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சத்திய மூர்த்தி பவனில் முதல்வர் விஜய் சந்தித்தார். அப்போது, விஜய்க்கு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை சால்வை அணிவித்தனர். மேலும், காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தவெக அரசு முன்னெடுக்கவேண்டும்.. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்