தவெகவுக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் நடவடிக்கை – உறுப்பினர்களுக்கு அதிமுக எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற மே 13, 2026 அன்று பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக தவெகவிற்கு எதிராக வாக்களிக்கும் என்றும், ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
சென்னை, மே 12 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற மே 13, 2026 அன்று பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. அந்த கட்சிக்கு ஏற்கனவே காங்கிரஸ் முழு ஆதரவளித்துள்ளது. மேலும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் வெளியில் இரு்து ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அதிமுக தவெகவிற்கு எதிராக வாக்களிக்கும் என்றும், ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
தவெகவுக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் நடவடிக்கை
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் 108 தொகுதிகளில் வென்றுள்ள தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு கடந்த மே 10, 2026 அன்று பதவியேற்பு செய்து வைத்தார்.
இதையும் படிக்க : உண்ட வீட்டுக்கே இரண்டகம் – சண்முகம் அணியை கண்டித்து அதிமுக பதிவு




இதற்கிடையில் அதிமுக கட்சியில் மிகப்பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் தற்போது எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிளவு பட்டுள்ளது. குறிப்பாக சி.வி.சண்முகம் தலைமையிலான அணி தவெகவிற்கு ஆதரவு தெரிவித்ததால் இந்த பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எடப்பாடி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க இபிஎஸ் முன்வந்தார். திமுகவுடன் இபிஎஸ் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்த நடத்தினார் என்றார். இது மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில், சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது. திமுகவுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
மேலும், அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.கவிடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே, அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே? பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா? என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் அதிமுக தவெகவிற்கு எதிராக வாக்களிக்கும் என்றும், ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.