ஈபிஎஸ் முதல்வராக முயன்றார்.. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு – பகீர் கிளப்பிய சி.வி. சண்முகம் குழு
AIADMK Ex Minister CV Shanmugam Extended Support For TVK | முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை, மே 12 : விஜய் முதல்வராக வர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் முடிவை அதிமுக வரவேற்கிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சிவி சண்முகம் அளித்த பரபரப்பு பேட்டி குறித்து விரிவாக பார்க்கலாம்.
17வது முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய்
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி மற்றும் கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் புதிய அரசை அமைத்துள்ளார். அரசு அமைத்த பிறகு அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவி சண்முகத்தின் செய்தியாளர் சந்திப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : அரசு நிறுவனங்களில் மெகா வேலைவாய்ப்பு 2026: உடனே விண்ணப்பியுங்கள்!
செய்தியாளர் சந்திப்பு மூலம் பரபரப்பை கிளப்பிய சிவி சண்முகம்
சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதிமுகவின் எதிர்காலத்தை யோசிப்பது முக்கியம். விஜய்க்கு வாக்களித்த மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். திமுகவுக்கு எதிராக தொடங்கப்பட்டது அதிமுக. திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க இபிஎஸ் முன்வந்தார். திமுகவுடன் இபிஎஸ் கூட்டணி பேசினார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தூத்துக்குடியில் போலீசார் தீவிர சோதனை.. மது போதையில் சிக்கிய பேருந்து ஓட்டுநர்கள் தப்பி ஓட்டம்!
அதிமுக, தவெகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது – சிவி சண்முகம்
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுகவில் சலசலப்புகள் நிலவி வந்தது. இந்த நிலையில், அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ளது. மொத்தமுள்ள 57 சட்டமன்ற உறுப்பினர்களில் 17 பேர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், 30 பேர் எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாகவும் பிரிந்துள்ளனர். இந்த நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பில் உள்ள அந்த 30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தான் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வழங்குவதாக சிவி சண்முகம் கூறியுள்ளார். இதன் மூலம், தவெகவின் பலம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.