AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்.. முதல்வர் விஜய்யின் முதல் உரை!

CM Joseph Vijay Speech : ஜனநாயகத்தின் இதயமாக சட்டப் பேரவை செயல்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். மேலும், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் முழு ஒத்துழைப்பை தருவார்கள் என்றார்.

ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்.. முதல்வர் விஜய்யின் முதல் உரை!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் உரை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 May 2026 11:11 AM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 2- ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை ( மே 12- ஆம் தேதி ) கூடியது. இதில், சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு: தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் சமமாகும். ஒரு உறுப்பினர் உள்ள கட்சிக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை தருவார்கள். பேரவையின் மாண்பு கண்ணியத்தை காக்க வேண்டும். ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகருக்கு உதவியாக செயல்படுவார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்தும் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் இந்த ஆட்சியில் நன்மை பெற்றுள்ளார்கள் என சொல்லும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும். இங்கு அனைவரும் சமம்.

ஜனநாயகத்தின் இதயமாக பேரவை செயல்பட வேண்டும்

மக்களின் எதிர்பார்ப்புகளை பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் சட்டங்களை அமல்படுத்தவேண்டி பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. நல்லது ஏற்கப்பட்டு, தீயவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்த பேரவை செயல்பட வேண்டும். அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு கொண்ட இந்த பேரவையே நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையை தமிழக வெற்றிக்கழகம் முன்மொழிந்து தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்து உள்ளீர்கள் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

பேரவையில் முதல்வர் விஜய் கூறிய குட்டி கதை

சபாநாயகரை அவை முன்னவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கையை பிடித்து அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கும் சம்பிரதாயம் குறித்து விஜய் விளக்கினார். அதில், இங்கிலாந்தில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளை போன்றதே தமிழகத்திலும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மன்னராட்சி இருந்த காலத்திலேயே இங்கிலாந்தில் பாராளுமன்றம் செயல்பட்டுள்ளது. அந்த காலத்தில் அனைத்து அதிகாரங்களை பெற்ற மன்னரும் இருந்தார். பாராளுமன்றமும் செயல்பட்டு வந்தது. அங்கு மன்னர் செய்ய விரும்பும் பணிகளை பாராளுமன்றம் நிராகரித்து விடும்.

சபாநாயகர் பதவியை விரும்பாதற்கு காரணம்

இந்த செய்தியை மன்னருக்கு தெரிவிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு ஆகும். தான் விரும்பிய பணிகளை பாராளுமன்றம் நிராகரித்த தகவலை கூறும் சபாநாயகருக்கு மன்னர் மரண தண்டனை விதித்து உத்தரவிடுவார். இதன் காரணமாக யாருமே சபாநாயகர் பதவிக்கு வருவதற்கு விரும்ப மாட்டார்கள். எனவே, புதிய பாராளுமன்றம் அமையும் போது சபாநாயகர் பதவிக்கு அறிவிக்கப்படும் நபர் தவித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபாகும். ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இந்த மரபு தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

Follow Us