AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக – அதிமுக கூட்டணி பேசியதா? உண்மைதான் என்ன? விளக்கமளித்த தலைவர்கள்!

AIADMK - DMK Alliance: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதா என்ற கேள்விக்கு அரசியில் கட்சிகளை சேர்ந்த ஆர். எஸ். பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

திமுக – அதிமுக கூட்டணி பேசியதா? உண்மைதான் என்ன? விளக்கமளித்த தலைவர்கள்!
கோப்பு புகைப்படம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 May 2026 12:57 PM IST

திமுக – அதிமுக கூட்டணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது: திராவிட முன்னேற்ற கழகம் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என்று ஏற்கனவே கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 220 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற சரித்திர சாதனையை எந்த கட்சியாலும் உடைக்க முடியவில்லை. திமுக கூட்டணி வெற்றி பெற்ற போது ஆட்டம் போடவும் இல்லை. தோல்வி அடைந்த போது துவண்டு போவதும் இல்லை. அதிமுகவின் முன்னாள் அமைச்சரான சி. வி. சண்முகம் எப்போதும் பதவியில் இருந்தவர் ஆவார். அவருக்கு பதவி ஆசை தற்போதும் இருந்து வருகிறது. அதன் காரணமாகவே திமுக – அதிமுக கூட்டணி என்ற கருத்தை முன்வைத்து வருகிறார். தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு காரணம் தேவை என கூறி திராவிட முன்னேற்றக் கழகம் எது சிலர் பழி சுமத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பேபி மறுப்பு

அதிமுகவில் பூட்டி வைத்துள்ளவர்கள் கதவை உடைத்துக் கொண்டு செல்வதற்காக பல்வேறு காரணங்களை தேடி வருகின்றனர். அதிமுகவை தமிழக வெற்றிக்கழகம் உடைக்கப் போகிறதா என்பதை முதல்வரும் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்கப் போவதாக கூறிய கருத்து அந்த கட்சியின் தலைவர் பேபி வதந்தி என மறுத்துள்ளார். கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற போதே திமுக என்ற மாபெரும் இயக்கம் உடையவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு!

திமுக – அதிமுக கூட்டணி அமைப்பதாக தகவல்

இதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம். பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்துடன் திரை மறைவில் எந்தவித பேரமும் நடக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கேட்கவில்லை. திமுக – அதிமுக இணைந்து என்னை முதல்வராக்க வேண்டும் என கூறியதாக தகவல் கிடைத்தது. திமுக தரப்பிலிருந்து அதிமுகவிடம் கூட்டணி அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

திமுக – அதிமுக கூட்டணி முதல்வராக திருமா

திமுக- அதிமுக கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் எந்த அளவுக்கு தலையிட்டது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், திமுக- அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தகவல் கிடைத்தது இடதுசாரிகள் முடிவுகளின் படி உயர்நிலைக் குழுவில் விவாதித்து எங்களது நிலைப்பாட்டை அறிவித்தோம். எல்லோரும் இது தாமதமான முடிவு என்று விமர்சித்தனர். அரசியல் கட்சியே நடத்துகின்ற தலைவருக்கு மட்டுமே தெரியும் இது போன்ற முடிவுகளை எப்படி எடுப்பது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: உண்ட வீட்டுக்கே இரண்டகம் – சண்முகம் அணியை கண்டித்து அதிமுக பதிவு

Follow Us