AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு – அமைச்சர் முக்கிய தகவல்

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 17, 2026 முதல் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் நடைமுறை முழுமையாகச் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு  – அமைச்சர் முக்கிய தகவல்
அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Aug 2026 19:41 PM IST

சேலம், ஆகஸ்ட் 2 : முன்பு பத்திரங்களை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 17, 2026 முதல் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் நடைமுறை முழுமையாகச் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தடர்பான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு

இது தொடர்பாக சேலத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 17, 2026 அன்று முதல் முழுமையான ஆன்லைன் பத்திரப்பதிவு முறை தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : 2026-27 பட்ஜெட்: முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எதிர்பார்ப்புகள் என்னென்ன?

மேவும் பேசிய அவர், ஆன்லைன் முறையில் பத்திரவு பதிவு செய்யும் நடைமுறையை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவிருக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளில் இருந்தபடி ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்ய முடியும். இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலை தவிர்க்க முடியும் என்றார்

முன்னதாக சேலம் அம்மாபேட்டையில் தனியார் பள்ளியில் விளையாட்டு விழாவை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். அப்போது அதே பள்ளியில் தன்னுடன் படித்த முன்னாள் மாணவர்களுடன் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென கயிறு அறுந்ததில் அமைச்சர் தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவருடன் இருந்தவர்கள் அவரை மீட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க : “டி.கே. சிவகுமாருக்கும் திமுக குடும்பத்திற்கும் நீண்ட கால நெருங்கிய உறவு!”.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டு!

இதுவரை நிலம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்ற சொத்துக்களை பதிவு செய்ய வாங்குபவரும் விற்பவரும் சார்பதிவாளர் அலுவலங்களுக்கு சென்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் புதிய ஆன்லைன் இணையதளம் மூலமாக இடைத்தரகர்கள் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன் பத்திரப்பதிவை மேற்கொள்ள முடியும்.

இந்த புதிய இணையதளம் மூலம் எந்த இடத்தில் இருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யலாம். நீங்கள் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்தவொரு சார்பதிவாளர் அலுவலக எல்லையின் கீழ் வரும் சொத்தையும் ஆன்லைன் வழியாகவே எளிய முறையில் பதிவு செய்துகொள்ளலாம். மதுரையில் இருந்து கொண்டு திருச்சி பகுதியில் உள்ள இடத்திற்கான பத்திரப்பதிவு செய்து கொள்ள முடியும்.

Follow Us