AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை, அரியலூர் உட்பட 5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் – வெளியான அறிவிப்பு

Key IAS Transfers : தமிழ்நாட்டில் கடந்த மே 10, 2026 முதல் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அலுவலர்கள் மற்றும் சென்னை உட்பட5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, அரியலூர் உட்பட 5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் – வெளியான அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 May 2026 20:59 PM IST

சென்னை, மே 30 : தமிழ்நாட்டில் கடந்த மே 10, 2026 முதல் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மே 29, 2026 நேற்று ஒரே நாளில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மே 30, 2026 இன்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அலுவலர்கள் மற்றும் சென்னை உட்பட5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டு வசதி துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மை செயலராக மாற்றப்பட்டுள்ளார். அதே போல சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங், மதுரை மாவட்ட ஆட்சியராக கௌரவ் குமார், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் பெண்கள், குழந்தைகள் மயக்கம்? – கோவில் நிர்வாகம் விளக்கம்

  • சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளினி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் அறிவிப்பு


முன்னதாக கடந்த மே 29, 2026 தமிழ்நாட்டில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக நாகப்பட்டினம், திருவள்ளூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : “புதிய ரேஷன் கார்டு”.. விரைவில் சிறப்பு முகாம்கள்.. அமைச்சர் வெங்கடரமணன் சொன்ன GOOD NEWS!!

மேலும் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் ஐபிஎஸ் மே 29, 2026 அன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவர் சென்னை மாநகர காவல் ஆணையராகவும், சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் சிறந்த பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் முதல்வர் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Follow Us