AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் ஐபிஎஸ் மே 29, 2026 அன்று நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 May 2026 20:04 PM IST

சென்னை, மே 29 : தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  உயர் கல்வித் துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, பொது சுகாதாரம், மறுவாழ்வு துறை சிறப்பு செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல நிதித்துறை செயலராக லலிதா, இணை செயலர்களாக கமல் கிஷோர் பிரசாந்த், மக்கள் நல்வாழ்வுத் துறை துணை செயலராக அழகு மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

அதே போல மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த பி.ஆகாஷ், மதுரை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அதே போல திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், கன்னியாகுமரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    மதுரை ஆட்சியராக இருந்த பிரவீன் குமார், நாகப்பட்டினம் ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
  • திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், தருமபுரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருச்சி ஆட்சியராக பிரித்திக் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஜே.இ.பத்மஜா, கள்ளக்குறிச்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் பிரியா, ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் லீலா அலெக்ஸ், வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • விடுப்பில் இருந்து திரும்பி வந்த வந்தனா கார்க், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : தமிழக சட்டமன்ற கூட்டம் ஜூலையில் கூடுகிறது.. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

தமிழக அரசின் அறிவிப்பு

மேலும், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த பூஜா குல்கர்னி, மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முன்னாள் செயலராக இருந்த ஐஏஎஸ் வி. அமுதவில்லி, ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல ஊரக வளர்ச்சித் துறையின் ஆணையராக இருந்த பி. பொன்னையா, கல்லூரிக் கல்வியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : திருச்செந்தூரில் அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

மேலும் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் ஐபிஎஸ் மே 29, 2026 அன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவர் சென்னை மாநகர காவல் ஆணையராகவும், சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் சிறந்த பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் முதல்வர் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Follow Us