தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? முதல்வர் தேர்வு செய்யும் முக்கிய அதிகாரி.. மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு!
Tamil Nadu next DGP : தமிழகத்தின் அடுத்த டிஜிபியை தேர்வு செய்தவதற்காக அதிகாரிகள் பெயர் பட்டியலை யூபிஎஸ்சி தேர்வாணையத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, இதில், இந்த அதிகாரி டிஜிபியாக நியமனம் செய்ய அதிக வாய்ப்ப இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜி வால் ஐபிஎஸ் பணி புரிந்து வந்தார். இவர், கடந்த 2025- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் நிரந்தர டிஜிபி என யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதனிடையே, தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் அந்த பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தின் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை தேர்வு செய்து அந்த பட்டியலை யுபிஎஸ்சி தேர்வாணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
மூவரில் ஒருவர் தமிழக டிஜிபியாக நியமனம்
தமிழகத்துக்கான புதிய டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இதில், 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி தேர்வாணையம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த மூன்று பேரில் ஒருவர் தமிழகத்தின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை ( மே 29) வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: திமுக கூட்டணி கட்சிகளால் தவெக ஆட்சியை மு.க.ஸ்டாலின் கவிழ்த்து விடுவாரா? மு.வீரபாண்டியன் கூறிய கருத்து!




மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு
அதன்படி, தமிழகத்தின் புதிய டிஜிபி- ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக தமிழக காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அருண் நியமனம் செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையராக இருந்து வந்த அருணை தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது.
சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி-யாக டி.எஸ். அன்பு நியமனம்
இதே போல, சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாக டி. எஸ். அன்பு நியமனம் செய்யப்பட்டிருந்தார். நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் தயாள் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதில், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி- ஆக சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகித்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக உயரிய பதவியான சட்டம் – ஒழுங்கு ஏ. டி. ஜி. பி.- ஆக டி. எஸ். அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: காங்கிரஸில் வெடித்தது அடுத்த சர்ச்சை.. வேட்பாளர்கள் தேர்வில் பெரிய முறைகேடு.. ஜோதிமணி எம்.பி. அதிரடி குற்றச்சாட்டு!